வடபழனி கோவிலில் சண்டி பாராயணம்
ADDED :2388 days ago
சென்னை: வடபழனி ஆண்டவர் கோவிலில் மழை வேண்டி சிவயோகிகள் நடத்திய சண்டி பாராயண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்.
தமிழகத்திற்கு தேவையான மழையும், நீர்வளமும் கிடைக்க வேண்டி, வடபழனியில் உள்ள முருகன் கோவிலில், சிவ பக்தர்கள் சார்பில், அகண்ட துர்கா சப்தசதி பீஜ மந்திர பாராயணம், இனறு (ஜூலை.,7ல்) நடந்தது. பாராயண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார். சண்டி பாராயணம் என்பது, துர்கா சப்தசதியின், 13 அத்தியாயங்கள், 700 சுலோகங்களை கொண்டது. இந்த பாராயணம், மனித வாழ்வின் ரகசியங்களை புரிய வைக்கிறது.