சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2352 days ago
சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தையொட்டி, இன்று தேரோட்டம் நடந்தது.
கடலுார் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோவிலில், ஆனித் திருமஞ்சன மகோற்சவம், 29ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.இன்று காலை, 8:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. நடராஜருக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அதிகாலை, சித்தசபையில் இருந்து புறப்பாடு செய்து, தேரில் எழுந்தருளி காட்சி அளித்தார். இரவு, 8:00 மணிக்கு, லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை மதியம், 12:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும். 3:00 மணிக்கு, நடராஜர்சித்சபை பிரவேச மகாதரிசனம் நடக்கிறது.