சூரன்குட்டை பைரவர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: சூரன்குட்டை ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணகிரியை அடுத்த சூரன்குட்டை ஸ்வர்ணாகர்ஷன பைரவர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த, 5ல், கங்கா பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம் பிரவேசபலி ஆகியவை நடந்தன. 6 மதியம், 1:00 மணிக்கு சொர்ணபைரவர் சுவாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். மாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சண்டிஹோமம், நவகிரஹ ஹோமம் மற்றும் இரவு, 9:00 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவர் சுவாமி சிலைகளை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, சாந்தி ஹோமம், மஹா தீபாராதனை நடந்தது. 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஜெகத்குரு ஜெயேந்திரபுரி மஹா ஸ்வாமிகள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றினார். மஹா தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம், அபிஷேக, அலங்காரம், அன்னதானம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து திரைப்பட பின்னனி பாடகர் கானா பாலாவின் இன்னிசை கச்சேரி நடந்தது. நிகழ்ச்சியில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.