உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்த்தசாரதி ரதம் கரிக்கோல ஊர்வலம்

பார்த்தசாரதி ரதம் கரிக்கோல ஊர்வலம்

புதுச்சேரி: லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலுக்கு, ரூ. 20 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட பார்த்தசாரதி ரதத்தின், கரிக்கோல ஊர்வலம் நேற்று நடந்தது.லாஸ்பேட்டையில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழாவிற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக பார்த்தசாரதி ரதம் செய்யப்பட்டுள்ளது. பதினேழு அடி உயரத்தில் செய்யப்பட்டு, பொன்னிற வர்ணம் தீட்டப்பட்டுள்ள பார்த்தசாரதி ரதத்தின், கரிக்கோல பவனி விழா, நேற்று நடந்தது. கோவிலின் அறங்காவலர் குழு செயலர் செல்வகணபதி எம்.எல்.ஏ., முன்னிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து கரிக்கோல ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று தேர் கோவிலை அடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !