செல்வ விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :2285 days ago
எண்ணுார்: செல்வ விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
எர்ணாவூர், மகாலட்சுமி நகரில் உள்ள, செல்வ விநாயகர் கோவில் பிரசித்திப் பெற்றது. இக்கோவில் கட்டி, 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கோவில் புனரமைக்கப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரு தினங்களாக, கோபூஜை, அங்குரார்ப்பணம், தனபூஜை, முதல் கால பூஜை, இரண்டாம் கால பூஜை, பிரவேச பலி போன்றவை நடைபெற்றன.நேற்று காலை, கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தில், மங்கலப் பொருட்கள் சமர்ப்பிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பின், விமான கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.