சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்
ADDED :4963 days ago
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (22ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (22ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, 8 மணிக்கு உற்சவர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் முடிந்து மூலவர் சரநாராயண பெருமாள் கோதண்டராமர் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், பிற்பகல் 4 மணிக்கு நடைதிறப்பு, இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது.