ஏழு கரங்களுடன் கணபதி
ADDED :2282 days ago
சிதம்பரத்தில் சிவன் நடராஜராக நடனமாடுகிறார். இதைக் கண்ட விநாயகருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. தானும் அவருடன் நடனமாடினார். இந்த நர்த்தன(நடன) கணபதியே இத்தலத்தில் ’கற்பக விநாயகர்’ எனப்படுகிறார். பிரகாரத்தின் வலப்புறத்தில் மேற்கு கோபுரத்தை ஒட்டி இவருக்கு சன்னதி உள்ளது. பொதுவாக விநாயகருக்கு தும்பிக்கையுடன் ஐந்து கைகள் இருக்கும். ஆனால் இவர் ஏழு கைகளுடன் இருக்கிறார்.