கர்மவினை என்பதன் பொருள் என்ன?
ADDED :2328 days ago
முற்பிறவிகளில் செய்த செயல் ’கர்மா’ எனப்படும். இதில் நல்லதும், கெட்டதும் அடங்கும். இதன் விளைவாக பாவ, புண்ணியம் உண்டாகிறது. அதனடிப்படையில் வாழ்வில் இன்ப, துன்ப அனுபவம் ஏற்படுகிறது. இதையே ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்கிறது இலக்கியம்.