கீதை காட்டும் பாதை
ADDED :2328 days ago
ஸ்லோகம்
த்ரிவிதம் நரகஸ்யேதம்
த்வாரம் நாஸ நமாத்மந:!
காம க்ரோத ஸ்ததாபோபஸ்
தஸ்மாதே தத்த்ரயம் த்யஜேத்!!
ஏதைர் விமுக்த: கெளந்தேய
தமோத் வாரைஸ் த்ரிபிர்நர:!
ஆசரத் யாத்மந: ஸ்ரேயஸ்
ததோ யாதி பராம் கதிம்!!
பொருள்: காமம், கோபம், பேராசை என்னும் மூன்றும் நரகத்தின் நுழைவு வாசல்கள். இவை உயிர்களை நாசப்படுத்தி கீழ்நிலைக்கு ஆளாக்குகின்றன. இதிலிருந்து உயிர்கள் விடுபட வேண்டும். அர்ஜூனா! இதில் இருந்து விடுபட்ட மனிதன் தன்னை மேன்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுகிறான். அதன் மூலம் மோட்சத்தை அடைகிறான். அதாவது என்னை வந்தடைகிறான்.