உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகனூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா

மோகனூர் பெருமாள் கோவில் தேர் திருவிழா

மோகனூர்: மோகனூரில், பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண  பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், திருத்தேர் பெருவிழா, கடந்த, 30ல்  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும், காலை, பல்லக்கு  புறப்பாடு, மதியம், ஸ்நபன திருமஞ்சனம், மாலை, சிம்மம், ஹனுமந்தம், சேஷ,  யானை, குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று  (ஜூலை., 8ல்)காலை, 9:00 மணிக்கு, திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடந்தது.

கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், அக்ரஹாரம், சின்ன அக்ரஹாரம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் கோவிலை அடைந்தது. அதில், சுற்று  வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து  இழுத்தனர். நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் உள்பட பலர்  பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !