உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெ.நா.பாளையம் விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெ.நா.பாளையம் விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பெ..நா.பாளையம்: துடியலுாரை அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர்  கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, புண்ணிய நதிகளிலிருந்து  கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு, முளைப்பாலிகை ஊர்வலம்  நடந்தது.

விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இம்மாதம், 11ம் தேதி நடக்கிறது. கோவில் புனரமை க்கப்பட்டு, கன்னிமூல கணபதி, விருந்தீஸ்வரர்,  விஸ்வநாயகி அம்பாள், சுப்ரமணியர், லட்சுமி நாராயண பெருமாள் ஆகிய  தெய்வங்களுக்கு கோபுரங்களும், துர்க்கை, சண்டிகேஸ் வரர், சூரியன், சந்திரன்,  நவநாயகர்கள், சனீஸ்வரன், ஆஞ்சநேயர், அதிகார நந்தி, உற்வச மூர்த்திகள்,  காலபைரவர் ஆகியவற்றுக்கு பரிவார சன்னதிகளும், கோபுரங்களும்  எழுப்ப ப்பட்டன.மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.

தொடர்ந்து, தன பூஜை, தீபாராதனை, பிரசன்ன அபிஷேகம் ஆகியன நடந்தன. மாலை, 4.00 மணிக்கு கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்கள், முளைப்பாலிகை, விமான கலசம் மற்றும் மங்கல பொருட்கள் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டன. மாலை, 6.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, சாந்தி ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தன.  

இதில், திரளான பெண்கள் பங்கேற்றனர். நேற்று 8ம் தேதி  மாலை முதல் கால யாக பூஜை துவங்கியது. இன்று 9ம் தேதி  இரண்டாம், மூன்றாம் கால பூஜையும், 10ம் தேதி நான்காம், ஐந்தாம் கால பூஜையும், 11ம் தேதி அதிகாலை ஆறாம் கால யாக பூஜையும் தொடர்ந்து, காலை, 9.00 மணிக்கு கும்பாபிஷேகம், மூல மூர்த்திகளுக்கு அபிஷேகம் ஆகியன நடக்கிறது. மாலை திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா ஆகியவை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !