சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கருட சேவையில் உலா
ADDED :2422 days ago
சோமங்கலம்:சோமங்கலம் சுந்தரராஜ பெருமாள் கோவிலில், நேற்று, கருட சேவை உற்சவம் நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, சோமங்கலம் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது.இந்த கோவிலில், ஆனி மாதம், அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம்(ஜூலை., 8ல்) மாலை, திருமஞ் சனம் நடந்தது.தொடர்ந்து, நேற்று (ஜூலை., 9ல்) காலை, சுந்தரராஜ பெருமாள், கருட வாகனத் தில் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.