திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூ.7.72 லட்சம் உண்டியல் வசூல்
ADDED :2322 days ago
திண்டுக்கல்:திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் அனிதா முன்னிலையில், கோயில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி தலைமையில் நடந்தது. உண்டியல் காணிக்கையாக 174 கிராம் தங்கம், 840 கிராம் வெள்ளி, ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 168 இருந்தது. பெண்கள் மற்றும் நேருஜி நகரவை மேல்நிலை பள்ளி மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.