கிணத்துக்கடவு ஆனி திருமஞ்சன வழிபாடு: நடராஜருக்கு அபிஷேகம்
ADDED :2321 days ago
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, நேற்று முன் தினம் (ஜூலை., 8ல்) காலை 10.00 மணிக்கு சிறப்பு வேள்வி பூஜை நடந்தது.
இதனை தொடர்ந்து, மாலை 5.00 மணிக்கு நடராஜர் சிலைக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேக வழிபாடு நடந்தது. இதனை தொடர்ந்து, புஷ்ப அலங்காரத்தில் நடராஜர் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.