பொங்கலூர் சாய் தியான பீட கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு
ADDED :2320 days ago
பொங்கலூர்:பொங்கலூர், தாயம்பாளையம் தென் ஷீரடி சமஸ்தானம், சாய் தியான பீட கோவி லில் மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும் மகா யாக பூஜை சமஸ்தான நிறுவனர் சாய் குமரன் தலைமையில் நடந்தது.ஈரோடு சிவயோக பிரபஞ்ச பீடம் சிவ மூர்த்தி சுவாமிகள், யாகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.இதில், பாரதமாதா இந்து மக்கள் இயக்க தேசிய துணைத் தலைவர் ரங்கசாமி, சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனர் கிருஷ்ணன், சக்தி சேனா இந்து மக்கள் இயக்க தலைவர் அன்புமாரி, சமஸ்தான பொருளாளர் சரளாதேவி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.