உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா

உடுமலை ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா

உடுமலை:பாப்பன்குளம் ஞான தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், நாளை, (11ம்  தேதி), ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழாவையொட்டி சிறப்பு பூஜைகள்  நடக்கிறது.மடத்துக்குளம் தாலுகா பாப்பன்குளத்தில், ஞான தண்டாயுதபாணி  சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலு க்கு, கும்பாபிஷேகம் நடத்தியதன்,  பதினாறாம் ஆண்டு நிறைவையொட்டி, ஸம்வத்ஸர அபிஷேக ஆண்டு விழா  நாளை நடக்கிறது.

இதையொட்டி, கோவிலில், மாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் சிறப்பு  பூஜைகள் துவங்கு கிறது. விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், புண்யாக வாசனம்,  பஞ்சகவ்ய பூஜை உட்பட சிறப்பு பூஜைகள், 6:30 மணி வரை நடக்கிறது.இரவு,  7:00 மணிக்குள், பதினாறு வித மங்கள திருமஞ்சன நீராட்டம், 7:00 மணிக்கு  மேல், மூலவருக்கு, ராஜ அலங்கார வெள்ளி கவசம் அணிவித்து, மகா  தீபாராதனை, சோடச உபசாரம், பிரசாதம் வினியோகம் நடக்கிறது. ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !