உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சுதர்சன லட்சார்ச்சனை ஹோமம்

உடுமலை சுதர்சன லட்சார்ச்சனை ஹோமம்

உடுமலை:உடுமலை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாருக்கு,  சுதர்சன லட்சார்ச்சனை ஹோமம், இன்று (ஜூலை., 10ல்) நடக்கிறது.

உடுமலை நெல்லுக்கடை வீதியில், ஸ்ரீ பூமிநீளா நாயகி, சவுந்திரவல்லி தாயார் சமேத சவுந்திர ராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில், இன்று, (10 ம் தேதி), சக்கரத்தாழ்வாருக்கு, சுதர்சன லட்சார்ச்சனை ஹோமம் ஒரு நாள் விழாவாக நடக்கிறது. காலை 6:30 மணிக்கு துவங்கி, இரவு 8:00 மணி வரை ஹோமம் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, சமயபுரம் ஆயிர வைசியர் சங்கத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !