உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி நந்திகேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா

புதுச்சேரி நந்திகேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா

புதுச்சேரி: வெள்ளாழர் வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், ஆனி  திருமஞ்சன விழா நடந்தது.

புதுச்சேரி வெள்ளாழர் வீதியில், நந்திகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நந்திகேஸ்வர ருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று (ஜூலை., 9ல்) நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஜூலை., 8ல்) மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று (ஜூலை., 9ல்) காலை 6:30 மணிக்கு ஆராதனை,  7:00 மணிக்குமேல், அடியார்கள் சூழ நந்திகேஸ் வரர் வீதி உலா, நகரின் முக்கிய  வீதிகள் வழியாக நடைபெற்றது. கோவில் உற்சவரான நந்திகேஸ்வரர், கடந்த 100  ஆண்டிற்கு மேலாக வீதி உலா செல்லாமல் இருந்த நிலையில், இந்தாண்டு வீதி  உலா சென்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !