சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்
ADDED :2408 days ago
சிதம்பரம்:அனந்தீஸ்வரன் கோவிலில் நடராஜருக்கு நடந்த ஆனி திருமஞ்சனம் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் ஆனி் திருமஞ்சனத்தையொட்டி, மகா மண்டபத்தில் சிறப்பு ஹோமம் நடைப்பெற்று, சிவகாம சுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷே கம், அலங்காரம் நடந்தது.இதனைதொடர்ந்து பன்னிருதிருமுறை பாடல்கள் பாடி மகா தீபாராத னை நடந்தது. சுவாமி புறப்பாடு செய்து கோவில் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்ன தானம் வழங்கப்பட்டது.