ராமேஸ்வரம் நடராஜர் தியான கோயிலில் திருபனந்தாள் ஆதீனம் தரிசனம்
ADDED :2320 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நடராஜர் தியான கோயிலில் திருபனந்தாள் ஆதீனம் சிறப்பு பூஜை செய்து தரிசனம் செய்தார்.
ராமேஸ்வரம் கோசுவாமி மடம் 2ல் அமைந்துள்ள நடராஜர் தியான கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. இதையடுத்து நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று நடராஜர் கோயிலில் காசிமடம் திருபனந்தாள் ஆதீனம் இளையபட்டம் திருஞானசம்பந்த சுவாமிகள் சுவாமி சிலைக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை செய்து தரிசித்தார். இதில் கோசுவாமி மடம் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், ராமேஸ்வரம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி ராமசுப்பு உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.