உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் பொன்னப்பஞானியார் குருபூஜை விழா

ராஜபாளையம் பொன்னப்பஞானியார் குருபூஜை விழா

ராஜபாளையம்:ராஜபாளையம் கருப்பஞானியார் சுவாமி சமாது கோயிலில்  பொன்னப்ப ஞானியார் ஜீவ ஐக்கிய சமாது ஆனி குருபூஜை விழா நடந்தது.  கோயில் துணைத் தலைவர் கருப்பஞானியார் தலைமை வகித்தார்.

ஞானபிரகாஷ் முன்னிலை வகித்தார். கருப்பஞானியார் மற்றும்  பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு காலை 12:00 மணிக்கு சிறப்பு முப்பழ  பூஜையுடன் விழா தொடங்கியது. சுற்று பிரகாரத்தில் உள்ள விநாயகர், முருகன்,  தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஆஞ்சநேயர், பிரம்மா உள்ளிட்ட தெய்வங்களுக்கும்  சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.

மாலை கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு பல்வேறு  அபிஷேக ங்களுடன் பூக்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்  பட்டது. அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !