ஆர்.எஸ்.மங்கலம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2470 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலூர் சாத்தையா கோவில், காளியம்மன், கருப்பன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ் வரர் வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கும்பநீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.