உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை அருகே மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை அருகே மாரியம்மன், காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

குளித்தலை: குளித்தலை அருகே வீரவள்ளி, முதலிகவுண்டனூர், கூடலூர்  மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள்  கலந்துகொண்டனர். குளித்தலை அடுத்த, கே.பேட்டை பஞ்., .வீரவள்ளி கிராமத்தில்  அமைந்துள்ள மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் மதிப்பில்  புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்று  முன்தினம் (ஜூலை., 10ல்) காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வந்தனர். யாக சாலை யில் மூன்று கால பூஜை செய்யப்பட்டு, நேற்று (ஜூலை., 11ல்) காலை, கோபுர கலசத்திற்கு கருப்பத்தூர் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.தொடர்ந்து தீபாரதனை நடந்தது.

* திம்மம்பட்டி பஞ்., முதலிய கவுண்டனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன்  கோவில் கும்பாபி ஷேகத்தையொட்டி, பக்தர்கள் நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) காலை காவிரி ஆற்றிலிரு ந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று காலை, கோபுர கலசத்திற்கு அய்யர்மலை சிவாச் சாரியார் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தார்.  

பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், தோகைமலை  ஒன்றியம், கூடலூர் பஞ்., தெற்கு கூடலூர் காலனி கிராமத்தில் உள்ள  மாரியம்மன். காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (ஜூலை., 11ல்) நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !