சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம்
ADDED :2313 days ago
காரியாபட்டி;காரியாபட்டி நரிக்குடி ரோட்டில் உள்ள ஸ்ரீகுபேரசாயி சாய்பாபா கோயிலில் 2ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. கணபதி ஹோமம், கலச பூஜை, நவக்கிரக ஆபரண பூஜை மற்றும் விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சாய்பாபாவுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களான கணபதி, பாலமுருகன் சாய்நாதர், ராதாகிருஷ்ணன், குரு ராகவேந்திரா சுவாமிகளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காரியாபட்டி மது சாயி சாய் பாபா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.