வழக்கறுத்தீஸ்வரர் ரிஷப வாகனத்தில் உலா
ADDED :2394 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவத்தின், 10ம் நாளான நேற்று, சுவாமி ரிஷப வாகனத்தில் உலா வந்தார். காஞ்சிபுரம், வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா, 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும், காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உலா வருகிறார். இதில், பிரபல உற்சவமான தேரோட்டம், 10ம் தேதி விமரிசையாக நடந்தது.நேற்று காலை, 10ம் நாள் உற்சவமான நடராஜர் புறப்பாடும், இரவு, ரிஷப வாகன புறப்பாடும் நடந்தது.இதில், மருகுவார் குழலி அம்பாளுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.