உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாமல்லபுரத்தில், மல்லிகேஸ்வரர் வீதியுலா

மாமல்லபுரத்தில், மல்லிகேஸ்வரர் வீதியுலா

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை, மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், 2003ல் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மீண்டும், 2017, ஜூலையில் நடந்தது. மறுமுறை நடந்து, இரு ஆண்டுகள் கடந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை., 13ல்), சிறப்பு உற்சவம் நடந்தது.இதை முன்னிட்டு, காலை, 8:30 மணிக்கு, சிறப்பு யாகம் நடத்தி, சுவாமி, அம்பா ளுக்கு, அபிஷேகம் செய்து, வழிபாடு நடந்தது.இரவு, 7:30 மணிக்கு, சுவாமி, அம்பாளுடன், நந்தி வாகனத்தில், கைலாச வாத்திய முழக்கத்துடன், வீதியுலா சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !