விருத்தாசலம் திரவுபதியம்மன் கோவிலில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி
ADDED :2392 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம், சாத்துக்கூடல் ரோடு ஆலமரத்து திரவுபதியம்மன் கோவிலில் அரவாண் களப்பலி நடந்தது.விருத்தாசலம், சாத்துக்கூடல் ரோடு, ஆலமரத்து திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 14ம் தேதி கொடியேற்றி, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தீ மிதி உற்ச வம் துவங்கியது. தொடர்ந்து, வேத வியாசர் பிறப்பு, கர்ணன் பிறப்பு, தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது.நேற்று (ஜூலை., 14ல்) காலை திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, மாலை 6:00 மணியளவில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடந்தது.