உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், நந்தீஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.பிரதோஷத்தையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் பிரதோஷ நந்திக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, நந்திக்கு புது வஸ்திரம் சார்த்தி, அருகம்புல், வில்வம்,மலர்மாலை களால் அலங்கரி க்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.அதேபோல், பெண்ணாடம் சாலை ஏகநாயகர் கோவில், தே.கோபுராபுரம் ஆதி சக்தீஸ்வரர் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில், நல்லூர் வில்வவனேஸ்வரர் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !