செல்வ விநாயகர் கோவில் விழா
ADDED :2383 days ago
திருப்பூர்:தாராபுரம் ரோடு, டி.எஸ்.கே. நகர் வலம்புரி செல்வ விநாயகர் கோவில் ஆண்டு விழா நடந்தது.ஆண்டு விழா முன்னிட்டு மேட்டுப்பாளையத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது.கோவில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், சங்கு ஸ்தாபனம், 108 திரவிய ேஹாமம் மற்றும் பூர்ணாகுதி ஆகியன நடந்தன.தொடர்ந்து வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீர்த்த அபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் ஆகியன நடந்தன.மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.