சிவராத்திரி ருத்ரபாராயணம்!
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாவட்ட கிளை சார்பில் உலக நன்மைக்காக இல்லந்தோறும் ஒவ்வொரு வளர்பிறை ஏகாதசி அன்று விஷ்ணுசகஸ்ரநாம பாராயணமும், மாத சிவராத்திரியை முன்னிட்டு ருத்ர பாராயணம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இல்லந்தோறும் ருத்ர பாராயணம் நிகழ்ச்சி மதனகோபாலசுவாமி சன்னதி தெருவில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் நாராயண அய்யர் தலைமை வகித்தார். ராஜாமணி சிவாச்சாரியார் சங்கல்பம் செய்து பாராயண நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து குரும்பலூர் சிவாச்சாரியார் சிவசுப்ரமணியன், பட்டர்கள் சவுந்திரராஜன், ரெங்கராஜன், ஈரோடு சவுந்திரராஜன் ஆகியோர் ருத்ர பாராயணம், புருஷ சுக்தம், சதுர்வேத சாரம், திராவிட வேதம், தமிழ்வேதம் சாற்றுமறை வினாயகர், சண்முக காயத்ரி, ருத்ர பிரம்ம காயத்ரி மந்திரங்கள் ஜெபித்தனர். இந்நிகழ்ச்சியில், வேப்பந்தட்டை சுபிக்ஷõ தொண்டு நிறுவன இயக்குனர் சுவாமிநாதன், மாநில செயற்குழு உறுப்பினரும், பேரளி சிறுதொழில் முனைவோருமான வேதகானம் சீனிவாசன், என்.டி.சி., ஆனந்தநடேசன், ஈஷா பாபு, கனரா வங்கி ராமமூர்த்தி, கண்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாராயணஅய்யர், மயூரப்பிரியன், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.