அம்மனுக்கு பிடித்த ஆடி
ADDED :2271 days ago
எல்லையற்ற சக்தி கொண்டவள் அம்பிகை. ஆயிரம் கண்கள் கொண்டவள் என்பதால் அவளை’ஆயிரம் கண்ணுடையாள்’ என அழைக்கிறோம். யாரும் அவளின் பார்வையிலிருந்து தப்ப முடியாது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் கோயில் கொண்ட அவளுக்கு, லலிதா சகஸ்ரநாமம் என்னும் நுாலில் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. இவற்றை ஆடிவெள்ளியன்று படிப்பது சிறப்பு. அம்மனுக்கு பிடித்தது ஆடி மாதம் என்பதால் இந்த நாளில் அம்மனுக்குரிய விழாக்கள் நடக்கிறது.