உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் மழைக்காக புரவி எடுப்பு விழா

திருப்புத்தூர் மழைக்காக புரவி எடுப்பு விழா

திருப்புத்தூர்: கண்டவராயன்பட்டியில் மழை வேண்டி காடப்பிள்ளை அய்யனார், வல்ல  நாட்டு கருப்பர் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.ஆனி மாத உற்ஸவ விழாவை முன்னிட்டு, இக்கோயிலுக்கு கிராமத்தினர் புரவி எடுத்து,  மழை வரம் வேண்டுதல் வைக்கின்றனர்.

இதற்காக நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) மண் குதிரைகளை தயார் செய்து  பொட்டலில் வைத்தனர்.பின் நெல்மணிகளை மண் குதிரையின் காலில் கொட்டி பெண்கள் வழிபட்டனர்.

புரவி எடுப்பு விழா நடத்தினால், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது  விவசாயி களின் நம்பிக்கை. பொட்டலில் இருந்து புரவி புறப்படும் முன் அரிவாள் மேல்  நின்று சாமியாடி குறி கேட்பார்.

அதற்கான உத்தரவு கிடைத்ததும், பொட்டலில் இருக்கும் புரவிகளை எடுத்து  ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர். சுவாமிக்கு சிறப்பு அபிஷேக  ஆராதனைகள் நடந்தது. ஏராள மான பக்தர்கள் புரவி எடுத்து வந்து நேர்த்தி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !