அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :2321 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது.
நேற்று முன்தினம் (ஜூலை., 14ல்) இரவு 7:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. சாத்தூர் ராமச் சந்திரன், எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி, சொக்கநாதர் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் கணேசன், இணை கமிஷனர் தனபால், செயல் அலுவலர் மகேந்திர பூபதி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பராஜ், மண்டகப்படிதாரர்கள் கலந்து கொண்டனர்.