கடலாடி அருகே ஆப்பனுார் நாதர் கோயிலில் திருக்கல்யாண உற்ஸவம்
ADDED :2358 days ago
கடலாடி : -கடலாடி அருகே ஆப்பனுார் கிராமத்தில்பழமையும், புரதான சிறப்பும் பெற்றகுரவங் கமழ் குழலாம்பிகை சமேத ஆப்பநாதர் கோயில் உள்ளது. திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அதிகாலை மூலவருக்கு மங்கள ஆரத்தியும், சிறப்பு அபிஷேக ஆராதனை, ஹோம வேள்விகள் நடந்தது.காலை 10:30 மணிக்கு ராமநாதபுரம் அர்ச்சகர் சங்கர்பரமேஸ்வரன் சார்பில பார்வதி தேவிக்குமங்கள நாண் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் பொன்னுஞ்சல் உற்ஸவமும், மாலை யில் சுவாமி காளைவாகனத்தில் வீதியுலாபுறப்பாடும், அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி சுவாமி கைலாசானந்த மகராஜ் செய்திருந்தார்.