ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மழை வேண்டி தொழுகை
ADDED :2284 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மழை வேண்டி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்தனர்.தமிழகத்தில் போதுமான குளிர்கால, கோடை கால மழையின்றி குளம், கண்மாய் வறண்டு நிலத்தடி நீர் குறைந்ததால் வீடு, ஓட்டல், வணிக கடைகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் குடிநீருக்கு பெண்கள் பல கி.மீ., நடந்து செல்லும் அவலம் உள்ளது. இந்நிலையில் மழை வேண்டி தமிழகத்தில் இந்து கோயில்களில் சிறப்பு யாகம், பூஜை, நடத்தினர். இதனை தொடர்ந்து மழை வேண்டி தங்கச்சிமடத்தில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்தனர்.