நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்
ADDED :2312 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக் குப்பம் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா நடந்தது. காலை கணபதி ஹோமம், அய்யப்ப சுவாமிக்கு மூலமந்திர ஹோமம் நடந்தது. 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடத்தினர்.பின், அய்யப்பனுக்கு சங்காபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது. இரவு அய்யப்பன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தலைவர் வைத்தியநாதன் செயலாளர் சாமிபிள்ளை, ராதா, சிவகுருநாதன், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.