விருதுநகரில் குருபூர்ணிமா பூஜை
ADDED :2641 days ago
விருதுநகர் : விருதுநகரில் அருகே மீசலுாரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திரில் குருபூர்ணிமா பூஜை நடந்தது. கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் விழா துவங்கியது. பாலாபிஷேகம் செய்யப்பட்டு சகஸ்ஹர நாமம் வாசிக்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியை நிர்மலா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.