உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை குரு பூர்ணிமா சித்தர் கோயிலில் வழிபாடு

உத்தரகோசமங்கை குரு பூர்ணிமா சித்தர் கோயிலில் வழிபாடு

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே எக்ககுடி கிராமத்தில் தஞ்சாக்கூர் சூட்டுக் கோல் செல்லப்ப சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது. நேற்று (ஜூலை., 16ல்)பவுர்ணமியில் வந்த குரு பூர்ணிமாவை முன்னிட்டு சித்தர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மூலவர் சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் காட்சி யளித்தார். ஆன்மிக சொற்பொழிவு, சிவபுராணம், அர்ச்சனை, நாமாவளி உள்ளிட்டவைகள் நடந்தது.பொருளாளர் முத்துக்குமார், சிவனடியார் செல்லையா, வசந்தா கன்ஸ்ட்ரக்க்ஷன்ஸ் இன்ஜினியர் மகேஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இக்கோயிலில் சித்தர் வழிபாடு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !