உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்திற்கு நன்கொடை

காஞ்சிபுரம் அத்தி வரதர் வைபவத்திற்கு நன்கொடை

காஞ்சிபுரம்: அத்தி வரதர் வைபவத்திற்காக, காஞ்சிபுரம் பில்லாபாங் சர்வதேச  உயர் பள்ளி நிர் வாகம், கலெக்டரிடம், 2 லட்சம் ரூபாய் நன்கொடை  வழங்கியது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும், அத்தி வரதர்  வைபவத்திற்கு, தனியார் நிறுவனங்கள், பல அமைப்புகள், வைபவத்திற்கு  நன்கொடை அளிக்கின்றன.

அதன்படி, காஞ்சிபுரம் பில்லாபாங் உயர் சர்வதேச பள்ளி சார்பில், கலெக்டர், பொன்னையாவிடம், பள்ளியின் சேர்மன், சி.ராதாகிருஷ்ணன், இயக்குனர், சி.தயாநிதி ஆகியோர், 2 லட்சம் ரூபாய், நன்கொடையாக வழங்கினர்.மேலும், அத்தி வரதர் வைபவத்தை காண வரும் பக்தர்கள் பயணம் செய்ய, பில்லாபாங் பள்ளியில் இயங்கும் பஸ்களை இலவசமாக வழங்குவதாகவும், சேர்மன் ராதாகிருஷ்ணன், கலெக்டரிடம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !