மங்கலம்பேட்டை கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் பவுர்ணமி பூஜை
ADDED :2630 days ago
மங்கலம்பேட்டை:கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நடந்த பவுர்ணமி பூஜையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் உள்ள கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் நேற்று (ஜூலை., 17ல்) பவுர்ணமி பூஜை நடந்தது. இதை யொட்டி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 மணிக்கு தீபாராதனை, பகல் 1:00 மணிக்கு அன்ன தான நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமா னோர் சுவாமி தரிசனம் செய்தனர்.