உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் பூச்சொரிதல் விழா

உத்தரகோசமங்கையில் பூச்சொரிதல் விழா

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத் திற்கு பாத்தியப்பட்ட வராகி அம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் வடக்கு பார்த்த முகமாக, தனி சன்னதியுடன் அமைந்துள்ளது. ஆதிமூலவராக வராகி அம்மன் சுயம்புவாக காட்சி தருகிறார். நேற்று (ஜூலை., 19ல்) முதல் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் காணப்பட்டார்.பெண்கள் பச்சை விரலி மஞ்சளை அம்மியில் கைப்பட அரைத்து, நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர்.

மாலையில் பூ சொரிதல் நிகழ்ச்சியும், இரவில் உற்ஸவர் வீதியுலா புறப்பாடும் நடந்தது. திரு வாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று (ஜூலை., 19ல்) ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாகம்பிரியாள், வன்மீகநாதர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர். பக்தர்கள் கோயில்முன்பு மாவிளக்கு வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !