கிருஷ்ணகிரி ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கிருஷ்ணகிரி: ஆடி வெள்ளியை முன்னிட்டு, மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆடி மாதத்தில் வரும், நான்கு வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மன் கோவில்களில், கூழ் ஊற்றி பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று (ஜூலை., 19ல்), ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில், அதிகாலை மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. பக்தர்கள் உப்பு மற்றும் மிளகை கோவிலில் செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், ராசுவீதியில் உள்ள துளுக்காணி மாரியம் மன் கோவில் உட்பட பல்வேறு மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
மேல்சோமார்பேட்டை முண்டக்கன்னி அம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் நடந்தது. பின்னர், நகரின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் நகர்வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மஹா சண்டி யாகம்: கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகர் போலீஸ் குடியிருப்பில் உள்ள, முத்து விநாயகர் துர்க்கையம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு நவ சண்டி மஹா யாகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் (ஜூலை., 19ல்) காலை, 7:30 மணிக்கு கோ பூஜை, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்பம், தேவி மாஹாத்மியம், சண்டி பாராயணம் புனர் பூஜை நடந்தது. 12:30 மணிக்கு மஹா தீபாராதனை பிரசாதம் வழங்குதல், 5:00 மணிக்கு கலச பூஜை, தேவி மாஹாத்மியம், சண்டி பாராயணம், லலிதா ஸஹஸ்ர நாமம், குங்கும அர்ச் சனை மற்றும் புனர்பூஜை நடந்தது. நேற்று (ஜூலை., 19ல்) காலை, 7:00 மணிக்கு கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், நவசண்டி மஹாயாகம், 12:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.