உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் அருகே பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

காஞ்சிபுரம் : குப்பையநல்லுார் கிராமதேவி பொன்னியம்மன் கோவிலில், 15ம் ஆண்டு ஆடித் திருவிழா, நாளை (ஜூலை., 21ல்) நடைபெறுகிறது.

உத்திரமேரூர் அடுத்த, குப்பையநல்லுார் கிராமத்தில், கிராமதேவி பொன்னியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா, 15ம் ஆண்டாக, நாளை நடைபெறுகிறது. காலை, 10:00 மணிக்கு செட்டிகுளம் பிள்ளையாருக்கு அபிஷேகமும், 11:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெறுகிறது.மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், 1:00 மணிக்கு, அம்மன் அழைத்தலும், 2:00 மணிக்கு அன்னதானம் நடைபெறு கிறது.

இரவு, 10:00 மணிக்கு, சின்ன பரவத்துார் சீதா நாடக மன்றத்தினரின், நாடகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை, பொன்னியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

* பெரிய காஞ்சிபுரம், சந்தவெளியம்மன் கோவிலில், நாக சிலைகளுக்கு பெண்கள் பூஜை செய்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, வழிபட்டனர். உற்சவர் சந்தவெளியம்மன், மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாகலுாத்து தெரு, சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமாள் கோவிலில், மூலவர் அம்மனு க்கு, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் நடந்தன. இரவு, அம்மன் வீதியுலா நடந்தது.பெரிய காஞ்சிபுரம், புத்தேரி தெருவில் உள்ள, சுப்ரமணியசுவாமி கோவிலில், 10 ஆண்டுகளுக்கு பின், பஞ்ச சக்திகளை, பதி அமர்த்தும் விழா நேற்று (ஜூலை., 19ல்) துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !