காஞ்சிபுரத்தில் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் உள்ள, பல அம்மன் கோவில்களில், ஆடித்திருவிழாவையொட்டி, நேற்று (ஜூலை., 19ல்), சிறப்பு அபிஷேகம் மற்றும் கூழ்வார்த்தல் நடந்தது.ஆடி மாதம், அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி முதல் வெள்ளியான, நேற்று (ஜூலை., 19ல்), காஞ்சிபுரத்தில் உள்ள, பல அம்மன் கோவில்களில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது.
பெரிய காஞ்சிபுரம், சந்தவெளியம்மன் கோவிலில், நாக சிலைகளுக்கு பெண்கள் பூஜை செய்து, அம்மனுக்கு பொங்கல் வைத்து, வழிபட்டனர். உற்சவர் சந்தவெளியம்மன், மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாகலுாத்து தெரு, சிவகாமி சமேத அழகிய நடராஜ பெருமாள் கோவிலில், மூலவர் அம் மனுக்கு, சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் நடந்தன. இரவு, அம்மன் வீதியுலா நடந்தது. பெரிய காஞ்சிபுரம், புத்தேரி தெருவில் உள்ள, சுப்ரமணியசுவாமி கோவிலில், 10 ஆண்டுக ளுக்கு பின், பஞ்ச சக்திகளை, பதி அமர்த்தும் விழா நேற்று (ஜூலை. 19ல்) துவங்கியது.
இதில், நேற்று (ஜூலை., 19ல்) காலை ஜலம் திரட்டுதல் நடந்தது. மதியம், 2:00 மணிக்கு, கருக் கினில் அமர்ந்தவள் கோவிலில், பொங்கல் வைத்த பெண்கள், அம்மனை வழிபட்டனர்.