உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதுார் தேருக்கு கூண்டு அமைக்கும் பணி மந்தம்

ஸ்ரீபெரும்புதுார் தேருக்கு கூண்டு அமைக்கும் பணி மந்தம்

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர் தேர் கூண்டு அமைக்கும் பணியை, பருவ மழை க்கு முன் முடிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.இங்கு, ஆண்டுதோறும் நடைபெறும் ராமானுஜர் அவதார விழா மற்றும் ஆதி கேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழாவில், தேர் பவனி நடைபெறும்.இந்நிலையில், 2017ம் ஆண்டு, சாலை விரிவாக்க பணிக்காக தேர் கூண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து, ஹிந்து அறநிலைய துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், தேர் கூண்டு அமைக்க, நிதி ஒதுக்கப் பட்டது.இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்பணி, கடந்த மாதம் துவங்கியது. ஆனால், இந்த பணிகள் மந்த கதியில் நடக்கின்றன.பருவ மழை துவங்கும் முன், தேர் கூண்டை விரைந்து அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !