உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாலாஜாபாத்தில் மழை வேண்டி பால்குடம்

வாலாஜாபாத்தில் மழை வேண்டி பால்குடம்

வாலாஜாபாத் : மழை வேண்டி, புரிசை கிராம பெண்கள், அம்மனுக்கு பால்குடம்  எடுத்தனர். காஞ்சிபுரம் அடுத்த, புரிசை கிராமத்தில், பொன்னியம்மன் கோவில்  உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம், அம்மனுக்கு விழா எடுக்கப்படும்.

நடப்பாண்டு, ஆடி திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டியும், கிராம மக்கள் ஒற்றுமைக்காக வும், அம்மனுக்கு பால்குடம் எடுத்து, பெண்கள் ஊர்வலமாக சென்றனர்.வேணு கோபாலசுவாமி கோவிலில் புறப்பட்ட பால்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக, களத்துமேடு பொன்னியம் மன் கோவிலை  வந்தடைந்தது. இங்குள்ள அம்மனுக்கு, 108 குட பாலாபிஷேகம் நடத்தி, பெண்கள்  வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !