உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், மாரியம்மன் கோவிலில் ஆடி விழா

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், மாரியம்மன் கோவிலில் ஆடி விழா

கோவிந்தவாடி : காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், பழமை வாய்ந்த  மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் ஆடித்திருவிழா, 19ம் தேதி,  ஏகாத்தம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

மூன்றாவது நாளாக நேற்று (ஜூலை., 21ல்), அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல், மாலை, 5:00 மணிக்கு மலர் அலங்காரத்தில், அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிந்தவாடி கிராமத்தைச் சுற்றியுள்ள பல கிராமத்தினர், அம்மனை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !