பழநி அருகே மழைவேண்டி பால்குட ஊர்வலம்
ADDED :2369 days ago
பழநி : பழநி அருகே அமரபூண்டி பகுதியில் கடந்தசில ஆண்டாக குறிப்பிடும்படியாக மழை பெய்யவில்லை. இதன்காரணமாக ஊர் கிராம மக்கள் ஒன்று கூடி மழைவேண்டி கரிகாளியம்ம னுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். மாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்கள் எடுத்து முக்கியவீதிகள் வழியே ஊர்வலம் சென்றனர்.
இரவு கோயிலை அடைந்த பின் அம்மனுக்கு ராக்காலத்தின் போது பாலாபிஷேகம் செய்து வழிப்பட்டனர். பஞ்சாமிர்தம், பன்னீர், பழவகைகள், விபூதி, சந்தனம் கொண்டு பதினாறு வகை யான அபிஷேகம் தீபாராதனை நடந்தது.