உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி வர்ணஜெப பூஜை

சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி வர்ணஜெப பூஜை

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுக பெருமாள் கோயிலில் மழை வேண்டி சிறப்பு  யாகசாலை பூஜைகள் நடந்தது.இந்த ஒன்றியத்தில் சில ஆண்டாக மழையின்றி  கண்மாய், ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.

இதனால் விவசாயம் செழிக்காமல், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் தட்டுப் பாட்டை போக்கி, விவசாயம் செழிக்க வேண்டி சேவுக பெருமாளை வேண்டி நேற்று 21 ல் மழைக் காக சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.

கணபதி ஹோமத்துடன் துவங்கிய பூஜையில் நவக்கிரக ஹோமம், வருண மந்திரம், பூர்ணாகுதி நடந்தது. பின் 108 சங்காபிஷேகம், பூர்ண கும்பத்தில் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். சேவுக பெருமாளுக்கு 21 வகையான திரவியாத்தால் ஆன அபிஷேகம், பூஜைகள் நடந்தது.

இரவு 7:00 மணிக்கு வெள்ளி ரத புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மழை வேண்டி சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !