பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை
ADDED :2267 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உலக நன்மை பெற வேண்டி, 20ம் தேதி) ஆடி மாதம் மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு, 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. மாலை 5:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, துர்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு துர்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், விநாயகர்பூஜையுடன், 1008 திருவிளக்கு பூஜை துவங்கியது. பூஜையில் பெண்கள் குத்து விளக்கு ஏற்றி, உலகம் நன்மை பெற, சிறப்பு பூஜை செய்தனர்.ஏற்பாடுகளை துர்காமகளிர் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.